கவின்ஸ் வாக் இந்தியா செயல்திட்டத்தின் கீழ் ஈரோட்டில் 100 செயற்கை கால்கள் வழங்கல்

கவின்ஸ் வாக் இந்தியா செயல்திட்டத்தின் கீழ் ஈரோட்டில் 100 செயற்கை கால்கள் வழங்கல்
X

கவின்ஸ் வாக் இந்தியா செயல்திட்டத்தின் கீழ் ஈரோட்டில் கால் இழந்தவர்களுக்கு100 செயற்கை கால்களை வழங்கிய கவின்கேர் நிறுவனம்கவின்ஸ் வாக் இந்தியா செயல்திட்டத்தின் கீழ் ஈரோட்டில் கால் இழந்தவர்களுக்கு100 செயற்கை கால்களை வழங்கிய கவின்கேர் நிறுவனம்

கவின்ஸ் வாக் இந்தியா செயல்திட்டத்தின் கீழ் ஈரோட்டில் கால் இழந்தவர்களுக்கு100 செயற்கை கால்களை வழங்கிய கவின்கேர் நிறுவனம்

கவின்ஸ் வாக் இந்தியா செயல்திட்டத்தின் கீழ் ஈரோட்டில் கால் இழந்தவர்களுக்கு100 செயற்கை கால்களை கவின்கேர் நிறுவனம் வழங்கியது.

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள இரட்டை கண்டு பகுதியில் கவின்கேர் பால் நிறுவனம் செயல்படுத்துகிறது. இந்த கவின்கேர் மற்றும் சமூக தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் டிரஸ்ட் உதவியுடன் , ஈரோடு மாவட்டத்தில் கால் இழந்த 100 நபர்களுக்கு செயற்கை கால்களை வழங்கும் விழா இன்று பவானி மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், கவின்ஸ் வாக் இந்தியா செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்நிகழ்வு தற்போது 7 வது ஆண்டாக நடைபெறுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கால் இழந்த நபர்களுக்கு , பிரத்யேகமாக தயாரிக்கப்படும் செயற்கை உறுப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு ஆதரவை வழங்கும் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்புறுதி ( CSR ) திட்டமாக இதை கவின்கேர் மேற்கொள்கிறது .

நீண்டகால நோய் அல்லது விபத்துகளின் காரணமாக தங்களது கால்களை இழந்து தவிப்பவர்களுக்கு இதுவரை சுமார் 700 செயற்கை வழங்கியிருக்கிறது. இதன்மூலம் கால்களை இழந்த ஏழை , எளிய மக்கள் நடமாடவும் , தைரியத்துடன் செயல்படவும் கவின்கேர் உதவியிருக்கிறது. கால்களை தானமாக நவம்பர் மாதத்திலிருந்து , திருச்செங்கோடு , குமாரபாளையம் , குப்பாண்ட பாளையம், அந்தியூர், பவானி, தலைவாசல், கொடுமுடி மற்றும் பள்ளிப்பாளையம் போன்ற பகுதிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகத்தின் இயக்குனர் வெங்கடேஷ் விஜயராகவன் மற்றும் ஃப்ரீடம் டிரஸ்டின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுதந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா