ஈரோட்டில் ஒரு வாரமாக பெட்ரோல் விலை மாற்றம் இல்லை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்தையடுத்து சில மாதங்கள் வரை பெட்ரோல் ,டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102 தாண்டியது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.
ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில மாதமாகவே பெட்ரோல் ,டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.06 பைசாவுக்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து அதே விலைக்க விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று 6 -வது நாளாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் 103.06-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைப்போல் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.97 -க்கு கடந்த ஒரு வாரமாக விற்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu