பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் பெருக்கெடுத்த உபரிநீர்

பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் பெருக்கெடுத்த உபரிநீர்
X

பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் பெருக்கெடுத்து ஓடும் உபரிநீர்.

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் பெருக்கெடுத்து வருகிறது.

பவானி சாகர் அணை நிரம்பிய நிலையில் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையால் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் ஆற்றுத் தண்ணீர் அதிகரித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் தேவை குறைந்த நிலையில் கசிவு நீரும் ஆற்றுக்கே வந்து சேர்கிறது. இதனால் பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வாய்க்கால் பாசனத்துக்குத் திறக்கப்படும் தண்ணீர் தேவையைக் காட்டிலும், நீர்வரத்து அதிகமுள்ளதால் பிரதான அணைக்கட்டு வழியாக வினாடிக்கு 2,900 கன அடி வீதம் உபரி நீர் பெருக்கெடுத்து வெளியேறி காவிரி ஆற்றில் கூடுதுறையில் கலந்து வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!