நெருஞ்சிப்பேட்டை பகுதியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு

நெருஞ்சிப்பேட்டை பகுதியில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு
X

நெருஞ்சிப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு, மனுக்களை பெற்றார்.

ஈரோடு மாவட்டம், பவானி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நெருஞ்சிப்பேட்டை பகுதியில், அமைச்சர் முத்துசாமி என்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு சென்ற அமைச்சர் முத்துசாமியிடம், அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர், இது குறித்து துறை ரீதியான அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண உண்ணி மற்றும் அரசு அலுவலர்கள், திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future