அமைச்சர் கே.சி.கருப்பணன் வேட்பு மனு தாக்கல்

அமைச்சர் கே.சி.கருப்பணன்  வேட்பு மனு தாக்கல்
X
2021 சட்டமன்ற தேர்தலின் அதிமுக பவானி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அமைச்சர் கே.சி.கருப்பணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பவானியின் புகழ்பெற்ற கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு,தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் என எராளமானோருடன் கூடுதுறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான வாணிலட்சுமி ஜெகதாம்பாளிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை உறுதிமொழியினை தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு எடுத்துக்கொண்டார்.

அமைச்சர் கருப்பணன் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தனது கட்சியினரை உடன் அழைத்துச் செல்லாமல், கூட்டணி கட்சியான பாமக மாவட்ட செயலாளர் மனோகரன் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் அஜித்குமார் ஆகிய இருவரையும் உடன் அழைத்துச் சென்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!