காலிங்கராயன் மன்னரின் சிலைக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மலர் தூவி மரியாதை
காலிங்கராயன் மணிமண்டபத்தில் உள்ள மன்னரின் சிலைக்கு தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மலர் தூவி மரியாதை செலுத்தினர்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் பவானி ஆறு வழியாக வெளியேறி பவானி அருகே காவிரி ஆற்றுடன் கலந்து தஞ்சை வள நாட்டை நோக்கி பாய்கின்றது. இந்த ஆறு கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக காலிங்கராயன்பாளையம் என்ற இடத்தில் நீரை தடுத்து அணையை கட்டி, ஈரோடு மாவட்டத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து 40 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் எந்த ஒரு பொறியியல் விஞ்ஞானம் இல்லாத காலத்தில் பூமியின் ஒட்டத்தை அறிந்து தனது சொந்த செலவில் அணையை கட்டி வாய்க்காலும் வெட்டி வைத்தார் காலிங்கராய மன்னன்.
1282ம் ஆண்டு தை மாதம் 5ம் தேதி பாசனத்தை காலிங்கராயன் மன்னன் துவக்கி வைத்தார். அதன் நினைவாக அன்றைக்கே நதி நீர் இணைப்பை வலியுறுத்தி செய்த இந்த திட்டத்தின் நினைவாக வருடம் தோறும் தை மாதம் 5ம் தேதி காலிங்கராயன் மன்னனின் பாசன அர்ப்பணிப்பு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி இன்று காலிங்கராயன் மணிமண்டபத்தில் உள்ள மன்னரின் சிலைக்கு தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராசு, திமுக துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளரும் திருச்செங்கோடு திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன்,தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, ஈரோடு திமுக பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் SLTசச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu