துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
X
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் பவானியில் 300க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியலும் 100 சதவீதம் வாக்களிப்பு மற்றும் மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம் பவானியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர், போக்குவரத்து துறையினர், துணை ராணுவ படையினர் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. பவானி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று லட்சுமி நகரில் நிறைவடைந்தது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி