பவானி அருகே வயலில் தீ: ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் கருகின

பவானி அருகே வயலில் தீ:  ரூ.1 லட்சம் மதிப்பிலான கரும்புகள் கருகின
X

ஈரோடு அடுத்துள்ள நாயக்கன்பாளையம் பகுதியில், வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் எரிந்து சேதமாகின. 

பவானி அருகே, கரும்பு காட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஒரு லட்சம் மதிப்பிலான கரும்புகள் தீயில் கருகி சாம்பலாகின.

ஈரோடு அடுத்துள்ள நாயக்கன் பாளையம் பகுதியில் வசிப்பவர் குமரேசன். இவர் தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில், ஆலைக்கரும்பு பயிரிட்டு உள்ளார்.

நேற்றிரவு, குமரேசனின் கரும்பு தோட்டத்தில் இருந்து திடீரென பயங்கர புகை வந்துள்ளது. இதையடுத்து, மளமளவென வயலில் தீ பரவ ஆரம்பித்தது. இதில், கரும்புகள் தீப்பற்றி எரிய தொடங்கின.

இச்சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் பவானி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி கரும்புத் தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கரும்புகள் எரிந்து சாம்பலாகின. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!