வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலர் : ஆடியோ சர்ச்சை

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலர் : ஆடியோ சர்ச்சை
X

வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் பவானி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்த வக்கீல் விஜயலட்சுமி.

ஈரோட்டில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலரின் ஆடியோ வெளியானதால் சர்ச்சை.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பவானி வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து பல்வேறு வழக்குகளை பவானி சார்பு நீதிமன்றத்தில் நடத்தி வருகிறார். இந்நிலையில் அம்மாபேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த முதல்நிலை காவலர் சாந்தி என்பவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக வழக்கறிஞர்கள் சங்கத்தினருடன் சேர்ந்து பவானி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்நிலை காவலர் சாந்தி என்பவர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பெண் காவலரின் இத்தகைய செயலுக்கு பவானி வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் காவலரின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்