கார் மீது லாரி மோதி பெண் மருத்துவர் உட்பட 3 பேர் பலி

கார் மீது லாரி மோதி பெண் மருத்துவர் உட்பட 3 பேர் பலி
X

விபத்தில் சேதமடைந்த கார்.

கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் மருத்துவர் உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் இந்திராணி .இவரது கணவர் தேவநாதன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தேவநாதன் உடன் பணிபுரியும் நடத்துநர் சத்தியசீலன். இவர்கள் மூவரும் கோவை சென்று விட்டு மேட்டூர் செல்ல ஈரோடு மாவட்டம் பவானி வழியாக காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை மருத்துவரின் கணவர் தேவநாதன் ஒட்டி வந்துள்ளார்.

அப்போது சேவனூர் பிரிவு அருகே எதிரே வந்த லாரி, காரின் மீது மோதியது. இதில் காரில் வந்த பெண் மருத்துவர் உள்பட மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேற்படி லாரி ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்தி விட்டு எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு வந்து லாரியில் சிக்கி கொண்ட பிரேதங்களை தீயணைப்பு துறையினர் உதவி கொண்டு கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!