ஈரோட்டில் தொடர்ந்து உயரும் பெட்ரோல்,டீசல் விலை : வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி

ஈரோட்டில் தொடர்ந்து உயரும் பெட்ரோல்,டீசல் விலை :  வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி
X
பைல் படம்
ஈரோட்டில் தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் ,டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மேலும் 31 பைசா அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101.01 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.94.31 -க்கு விற்பனையானது. இன்று மேலும் 18 பைசா உயர்ந்து ரூ.94.49-க்கும் விற்பனை செய்யப்பட்டது .தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101-ஐ எட்டி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!