கொரோனா விதிமீறல்: அரசு வங்கிக்கு அபராதம்.

கொரோனா விதிமீறல்: அரசு வங்கிக்கு அபராதம்.
X

ஈரோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

கொரோனா விதிமுறைகளை மீறிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் அபராதம் விதித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், பவானி அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலிங்கராயன்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சமூக இடைவெளி இல்லாமலும் முகக்கவசங்கள் இல்லாமலும் வாடிக்கையாளர்கள் வங்கியின் வெளியே இருப்பதை கண்ட கலெக்டர் அதிரடியாக வங்கிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு பணிபுரியும் வங்கி ஊழியர்கள் மற்றும் சமூக இடைவெளி இல்லாமல் வாடிக்கையாளர்கள் நிறைந்து காணப்பட்டனர். இதனையடுத்து கலெக்டர் கதிரவன் வங்கியின் மேனேஜரை அழைத்து ஏன் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வில்லை என்றும் இனிவரும் காலங்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் வங்கிக்கு சீல் வைக்கப்படும் என்றும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் ரூ.5000 ரூபாய் அபராதம் விதித்தார். இதனையடுத்து பவானியின் பல்வேறு பகுதிகளில் மேற்கெண்ட ஆய்வில் மெக்கானிக் கடை, அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் கடை ,மற்றும் டீ கடைகளுக்கு ரூ 5000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து சென்றார்.

ஈரோடு மாவட்ட கலெகர் கதிரவன் அதிரடி சோதனையின் காரணமாக பவானி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!