ஈரோட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியீடு

ஈரோட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியீடு
X

பைல் படம்.

ஈரோட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019-ஆம் ஆண்டு நிரப்பப்பட்ட பதவியிடங்களில் இறப்பு, பதவி விலகல் போன்ற காரணங்களால் காலியாக உள்ள பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜுன்-30 தேதி வரை ஏற்பட்டுள்ள 27 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, தற்செயல் தேர்தல்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு எண்.5 -க்கான தேர்தலும், ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 4-க்கான தேர்தலும், பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 10-க்கான தேர்தலும் மற்றும் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ள 4.சிற்றூராட்சித் தலைவர்களுக்கும் மற்றும் 20-கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவதற்கான கால அட்டவணை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

1.தேர்தல் அறிவிப்பு பிரசுரித்தல் மற்றும் வேட்புமனுக்கள் பெறுதல் - 15-09-21 தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

2.வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் - 22-09-21 தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

3.வேட்புமனுக்களை ஆய்வு செய்தல் - 23-09-21 தேதியன்று காலை 10 மணி

4.வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் - 25-09-21 தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை

5.வாக்குப்பதிவு நாள் - 09-10-21 தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

6.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் - 12-09-21 தேதியன்று காலை 8 மணிக்கு

7.தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் நாள் - 16-10-21 தேதி

8.தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் பதவியேற்பு நாள் - 20-10-21 தேதி

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!