/* */

பவானி நகராட்சிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களை டிஐஜி ஆய்வு

பவானி நகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணும் மையம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை டிஐஜி பார்வையிட்டார்.

HIGHLIGHTS

பவானி நகராட்சிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களை டிஐஜி ஆய்வு
X

ஆய்வு மேற்கொள்ளும் டிஐஜி முத்துசாமி.

ஈரோடு மாவட்டம் பவானியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 27 ஆண்டுகளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணும் மையமான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாக்கு பதிவு மையம் நடைபெறும் பதற்றமான வாக்குச்சாவடிகளான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ துவக்கப்பள்ளி, காமராஜர் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட ஆறு பள்ளிகளில் கோயமுத்தூர் சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வாக்குப்பதிவின்போது வருகின்ற அலுவலர்கள் தங்குவதற்கு போதுமான இட வசதிகள் உள்ளனவா? அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளான கழிப்பறை வசதிகள், தண்ணீர் வசதிகள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஒரு சில இடங்களில் அலுவலர்கள் தங்குவதற்கான அத்தியாவசிய தேவைகளான கழிப்பிட வசதிகள் அருகில் உள்ள குப்பைகளை நகராட்சி நிர்வாகம் இதுவரை அகற்றப்படவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் அதிகாரியிடம் கூறினர்.

தேர்தலின்போது கட்டாயம் அனைவருக்கும் தண்ணீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தேர்தலை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்றும், ஆலோசனை கூறினார். இந்த ஆய்வின் போது பவானி துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பவானி காவல் உதவி ஆய்வாளர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி