காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் எம்எல்ஏ தலைமையில் தீபவிழா

காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் எம்எல்ஏ தலைமையில்  தீபவிழா
X

காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில், காலிங்கர்  தீபத்திருவிழா மொடக்குறிச்சி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. 

காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் மொடக்குறிச்சி எம்எல்ஏ தலைமையில் தீபத்திருவிழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நவம்பர் 19 இன்று காலிங்கராயன் தீபத் திருவிழா நடைபெற்றது. வாய்க்கால் வழியாக வரலாறு படைத்த காலிங்கராயனுக்கு, அணைக்கட்டு பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று 1008 விளக்கு ஏற்றி காலிங்கராயனை, காலிங்கராயன் வாய்க்காலில் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி கே சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற விழாவில், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன சபை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் மன்றம், பஞ்சலிங்கம் உழவர் மன்றம், காலிங்கராயன் பாசன சபை, காலிங்கராயன் பாசன சபை கூட்டம், காலிங்கராயன் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story