கொரோனா பாதித்தவர்கள் பாதுகாப்புடன் வாக்குபதிவு

கொரோனா பாதித்தவர்கள் பாதுகாப்புடன்  வாக்குபதிவு
X

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவினால் பாதித்த 49 பேர் பாதுகாப்பு உடையுடன் வந்து வாக்குபதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் கொரோனாவினால் பாதித்தவர்களது முழு விபரம், போன் எண், ஓட்டுச்சாவடி விவரத்தை அறிந்து மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு வரவழைத்து ஓட்டு போட ஏற்பாடு செய்திருந்தனர். கொரோனா பாதித்தவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருவதற்கு முன்பாகவே அந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.

கொரோனா பாதித்த நபர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து தங்களது ஜனநாயக கடமைகளை ஆற்றினர். அவர்கள் சென்றதும் அங்கு கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. நேற்று ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதித்த 49 பேர் ஓட்டு போட்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மருத்துவர்கள் ஆலோசனை பேரில் கொரோனா பாதித்தவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஓட்டு போட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!