கொரோனா பரவல் எதிரொலி : வெறிச்சோடிய பஸ்கள்

கொரோனா பரவல் எதிரொலி : வெறிச்சோடிய பஸ்கள்
X
கொரோனா பரவல் காரணமா ஈரோட்டில் அரசு , தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் முற்றிலுமாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா 2 - ம் அலை வேகமாக பரவி வருவதால் தினமும் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதனால் இரவு நேர பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. காலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 11 பணிமனைகளில் தினமும் 728 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் தினமும் 269 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கால் தனியார் பஸ்களில் 70 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பஸ் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.ஒரு சிலர் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர். இதனால் காலை வேளைகளில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் இன்றி பஸ் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil