கொரோனா பீதி: காற்று வாங்கும் பஸ்கள் - டல் அடிக்கும் கலெக்‌ஷன்!

கொரோனா பீதி: காற்று வாங்கும் பஸ்கள் - டல் அடிக்கும் கலெக்‌ஷன்!
X
கொரோனா பரவல் எதிரொலியாக ஈரோட்டில் பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைந்ததுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், இரவு நேர பஸ்கள் சேவை ரத்து செய்யப்பட்டு பகல் நேரத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக, ஈரோட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல் போன்ற வெளி மாவட்ட பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது.

கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பஸ் பயணத்தை தவிர்த்து, இருசக்கர வாகனங்களில் செல்ல ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இதேபோல் தொலைதூர பஸ்களில் பயணிகள் எண்ணிக்கையும் குறைந்து உள்ளதால் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: நகர பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது. இரவு 7 மணிக்கு மேல், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இயக்கம் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, தஞ்சை, நாகை, கிருஷ்ணகிரி, ஓசூர், திருநெல்வேலி என தொலைதூரம் இயக்கும் பஸ்கள் தினசரி ஒருமுறை சென்று வரும் வகையில் இயக்கி வருகிறோம்.

சேலம் ,கரூர் நாமக்கல் ,சத்தியமங்கலம், பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு இயக்கும் பஸ்கள் கடைசிநேர இயக்கத்தை நிறுத்தி உள்ளோம். இதில் தொலைதூரத்தில் இருந்து வரும் பஸ்கள் மாலை 7 மணிக்கு முன், ஈரோடு பஸ் நிலையம் வந்து விட்டால், அவற்றை கோபி, சத்தியமங்கலம், பவானி ,கொடுமுடி போன்ற தேவையானவர்களுக்கு இயக்கி வருகிறோம்.

வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. வெளி மாவட்டங்களுக்கு 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil