மது பாட்டில்கள் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்

மது பாட்டில்கள் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்
X
காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே விற்பனை என்பதால் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை அதிக அளவு மதுப்பரியர்கள் வாங்கிச் சென்நனர்.

கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் நேற்றைய தினசரி பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 23 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் டாஸ்மாக் கடைகளிலும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. இதன்படி டாஸ்மாக் பார்களில் அமர்ந்து மது குடிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 128 பார்கள் செயல்பட்டு வந்தன. பார்கள் இயங்க தடை விதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 128 பார்களும் மூடப்பட்டன.

இதுபோல் பகல் 12மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகள் காரணமாக இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூ 5 கோடி வரையும், பண்டிகை விசேஷ காலங்களில் ரூ.10 கோடி வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடை இனி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கு திறந்தன. பகல் 12 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது. இதனால் மது பிரியர்கள் இன்று காலை 8 மணி முதலே டாஸ்மாக் கடைக்கு வந்து தேவையான பாட்டில்களை அள்ளிச் சென்றனர். டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம்,தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.அந்த வட்டத்தில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself