/* */

பவானி: தடுப்பூசி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் 67 இடங்களில், 13ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது தடுப்பூசி போடுவதில் பொதுமக்களும்கு ஆர்வம் அதிகித்துள்ளதால் அதிகாலை முதலே மையங்களில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் குவியத் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக பாவனியில் 6 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பணிகள் குறித்தும், டோக்கன் வழங்குவது மற்றும் மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பவானியில் 6 தடுப்பூசி மையங்களிலும் சேர்த்து இன்றைய தினம் மொத்தம் 1000 கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

Updated On: 19 Jun 2021 9:43 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி