அம்மாபேட்டையில் சுகாதார நிலையம் , கொரோனா மையங்களில் கலெக்டர் ஆய்வு

பவானி அடுத்துள்ள அம்மாபேட்டையில், ஆரம்ப சுகாதார நிலையம், கொரோனா பரிசோதனை மையம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பவானி அடுத்துள்ள அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்டப்பட்ட சூடமுத்தான்பட்டி, தொட்டிபாளையம் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடைவடிக்கைகள் குறித்து, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து அம்மாபேட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மருந்துகள் இருப்பு உள்ளிட்டவற்றை குறித்து, மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதிகளில் உள்ள கொரோனா பரிசோதனை முகாம் மற்றும் காய்ச்சல் கணக்கெடுப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, சின்னபள்ளம் சோதனைச்சாவடியில் போலீசார் மேற்கொண்டு வரும் வாகனச்சோதனைகள் குறித்து பார்வையிட்டார். ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) ஏகம் ஜெ.சிங் உட்பட பலர் இருந்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா