காய்கறி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அர்ஜுன் சம்பத் கோரிக்கை
அர்ஜுன் சம்பத்திற்கு, கட்சியினர் காய்கறி மாலை அணிவித்தனர்.
தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் தக்காளி, வெண்டைக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையுயர்வைக் கடுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டார்.
பவானியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காசிக்கு நிகரான பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகள் செய்யப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், கூடுதுறை திறக்கப்படாததால் திதி கொடுக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, இம்மாதம் 30-ம் தேதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரள மாநிலம் ஐயப்பன் கோயிலுக்கும் செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிக்கக்கூடாது. கேரள மாநிலத்தில் தமிழக பக்தர்களுக்கு தங்கும் விடுதி கட்ட வேண்டும். ஏழை, எளிய ஐயப்ப பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை தலா ரூ.6,000 வழங்க வேண்டும்.
முல்லைப் பெரியார் அணையின் நீர்தேக்க உரிமையைப் பாதுக்காக தமிழக அரசை வலியுறுத்தி கம்பத்தில் போராட்டம் நடத்தப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தி உள்நாட்டு யுத்தத்தை முறியடிக்கும் வகையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளது. இச்சட்டங்களினால் விவசாயிகளுக்கு பயன்களே அதிகம் உள்ளது. அதிமுக அதிக தொகுதிகளில் வென்ற கொங்கு மண்டலத்தை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதில் திமுக புறக்கணிக்கக் கூடாது.
தற்போது காய்கறிகள் விலையுயர்வால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோன்ற நிலை ஏற்பட்டபோது, குறைந்த விலைக்கு கிடைக்க ஏற்பாடு செய்ததுபோன்று தமிழக அரசு காய்கறிகள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu