மாணவர்களுக்கு 30 லட்சம் சத்து மாத்திரைகள்-கல்வி அமைச்சர்

மாணவர்களுக்கு 30 லட்சம் சத்து மாத்திரைகள்-கல்வி அமைச்சர்
X

முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 30 லட்சம் சத்து மாத்திரைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் அணைக்கட்டில் காளிங்கராயன் தின விழா அரசு விழாவாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,முதல் நாள் பள்ளிக்கு வரும் 30 லட்சம் மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

மேலும் பொதுத்தேர்வை பொறுத்த வரையிலும் சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியிட்ட பின் தமிழக முதல்வருடன் ஆலோசித்த பின்னர் தேதி அறிவிக்கப்படும் எனவும் பாடத்திட்டங்கள் குறைப்பு நாட்கள் எண்ணிக்கை ஆகியவை சூழ்நிலைக்கேற்ப குறைக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதனை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதால் அதனை அவர்கள் பின்பற்றுவார்கள் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
why is ai important to the future