தமிழகத்தில் 2 இடங்கள் காலியாகும்- அண்ணாமலை

தமிழகத்தில் 2 இடங்கள் காலியாகும்- அண்ணாமலை
X

தமிழகத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள் காலியாகும் என பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையத்தில் பாஜகவின் தேசபக்தர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் மன்னித்து விட்டதாக ராகுல் தெரிவித்துவிட்டார். ஆனால், எழுவரின் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசும் தனது நிலைப்பாட்டினை உச்சநீதிமன்றத்தில் தெளிவாக கூறிவிட்டது.

திமுக குறித்த கேள்விக்கு, 2ஜி வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விரைவில் வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது பாருங்கள் தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாகும். ஏற்கனவே ஒரு இடம் காலியாக இருக்கிறது. அப்புறம் அது மூன்றாக மாறும் .தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டுவர இருப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது