பவானி தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

பவானி தொகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
X
பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.58 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டிபாளையம் ஊராட்சி பகுதியில் சாலை மேம்பாடு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல், காங்கிரீட் தளம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் கலந்துகொண்டு 1.58 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அதிகாரிகளிடம் இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் பூங்கோதை வரதராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!