கவுந்தபாடியில் அனைவருக்கும் வீடு திட்டம்
ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தபாடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 14.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்த அரசு ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது ஏழை, எளிய மக்களின் நலன் கருதி வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள், விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளை வழங்கி வருகிறது. மேலும் சொந்த நிலம் இருப்பவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கான மானியத் தொகை வழங்கப்படுகிறது. இன்று பணிகள் தொடங்க உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 2.16 கோடி ரூபாயும் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு 10.08 கோடி ரூபாய் மற்றும் பயனாளிகளின் பங்களிப்பு தொகை 2.16 கோடி ரூபாய் ஆகும். ஒரு வீட்டின் மதிப்பு 10 இலட்சம் ரூபாய் இதில் பயனாளிகளின் பங்களிப்பு தொகை 1.50 இலட்சம் ரூபாய் ஒரு வீட்டின் பரப்பு 400 சதுர அடி இதில் அனைத்து வசதிகளும் இருக்கும் படி அமைக்கப்பட்டுள்ளது பேரூராட்சி பகுதிகளில் நீர்நிலை மற்றும் சாலை புறம்போக்கில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்புதாரர்கள் மற்றும் வீடற்ற நகர்புற ஏழை, எளிய மக்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு வீடுகள் வழங்கப்படும். இப்பணிகளை உரிய காலத்தில் விரைந்து முடித்து தகுதியின் அடிப்படையில் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu