எப்படி பிரச்சாரம் செய்தாலும் ஒரு சீட் கூட தேறாது : அமைச்சர் கருப்பணன்

எப்படி பிரச்சாரம் செய்தாலும் ஒரு சீட் கூட தேறாது : அமைச்சர் கருப்பணன்
X
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் எவ்வாறு மக்கள் மத்தியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட அகக்கட்சி பெறப்போவதில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பட்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான அடிப்படை வசதிகளுக்கான திட்ட பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் கருப்பணன்,

போகிப் பண்டிகையை மாசு இல்லாத வகையில் தமிழக மக்கள் கொண்டாட சுற்றுச்சூழல் துறை சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச்சூழல் துறை சார்பில் கூடுதலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கருப்பணன், பவானி ஆறு மாசடைந்து இருப்பதை கமலஹாசன் சுத்தம் செய்வதாக கூறியிருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர் தமிழகம் முழுவதும் பல்வேறு வகைகளில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டாலும் வரும் சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் சார்பில் கமலஹாசன் உள்பட ஒரு சட்டமன்ற உறுப்பினரும் கூட வெற்றி பெறப் போவதில்லை என விமர்சித்தார். வீடு வீடாக ரேஷன் பொருள் கொடுக்கப்படும் என்று சொன்னவர்கள் நிலைமைதான் நடிகர் கமல்ஹாசனுக்கும் ஏற்படும் என்று அமைச்சர் கருப்பன் தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business