ஈரோட்டில் உருமாறிய கொரோனா இல்லை ஆட்சியர் பேட்டி

ஈரோட்டில் உருமாறிய கொரோனா  இல்லை ஆட்சியர் பேட்டி
X

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என மாவட்டஆட்சியர் கதிரவன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் பவானியில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பங்கேற்று பவானி நகர குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாயுடன் கூடிய இலவச வேட்டி, சேலை, கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்கினார். இதனையடுத்து பயனாளிகள் மத்தியில் பேசிய அமைச்சர் கருப்பண்ணன், பவானி சட்டமன்ற தொகுதியில் உள்ள 10,796 குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோடி ரூபாய் வரை பொங்கல் தொகுப்பு பரிசு வழங்க இருப்பதாகவும் அதனால் குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியில் நியாயவிலை கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், ஈரோடு மாவட்டத்தில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றார். மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த கணவன் மனைவி உட்பட 3 பேரையும் பெருந்துறை அரசு மருத்துமனை மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி., தங்கதுரை, கூட்டுறவுதுறையினர், வருவாய் துறையினர் மற்றும் பயனாளிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!