கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர் நீரில் மூழ்கி பலி

கீழ்பவானி வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர் நீரில் மூழ்கி பலி
X

நீரில் மூழ்கி பலியான ராமராவ். 

சபரிமலைக்கு சென்ற வாலிபர் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் வினுகொண்ட் பகுதியை சேர்ந்தவர் செங்கராவ். இவரது மகன் ராமராவ் 26. மருந்து கடை வைத்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் இருந்து தனது நண்பர்கள் நால்வர் உடன் சபரிமலைக்கு நேற்று முன்தினம் கிளம்பியுள்ளனர். இதனையடுத்து நேற்று காலை ஈரோடு நசியனூர் அடுத்த கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க ராமராவ் மற்றும் இவரது நண்பர்கள் இறங்கியுள்ளனர் .

அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ராமராவ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். செய்வதறியாது திகைத்த ஆந்திர மாநில வாலிபர்களுக்கு அக்கம்பக்கத்தினர் உதவி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சித்தோடு காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பெருந்துறை தீயணைப்பு துறையினர் 8 மணி நேரமாக ராமராவ் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்