கொரோனா அதிகரிப்பு : ஈரோட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு

கொரோனா அதிகரிப்பு  : ஈரோட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு
X
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பதால் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ம் அலை வேகம் எடுத்தது. பலர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பலர் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தினமும் 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் தினமும் 4,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் காரணமாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர்கள் விரைவாக குணம் அடைந்தனர்.

இதையடுத்து மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் தினமும் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனை எண்ணிக்கை 8 ஆயிரமாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 13 நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த பலவேறு முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாவட்டத்தில் மீண்டும் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் தினமும் 1300 பேர் வரை பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!