தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர்

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் தொழில் சார் சமூக வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், சென்னிமலை மற்றும் தாளவாடி ஆகிய 5 வட்டாரங்களில் 77 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் உள்ள ஊராட்சிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஈடுபட்டு வரும் சிறு, குறு, நுண் நிறுவன செயல்பாடுகளை, தனிநபர் மற்றும் கூட்டு நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு ஊராட்சிக்கு ஒரு நபர் வீதம் கீழ்கண்ட தகுதிகள் உடைய நபர்களிடமிருந்து தொழில்சார் சமூக வல்லுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்:

1. மகளிர் சுய உதவிக்குழுவை சார்ந்தவாராக இருத்தல் வேண்டும்.

2. விண்ணப்பத்தார் அதே ஊராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

3. வயது 25-லிருந்து 45 வயது உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

4. இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

(குறிப்பாக வங்கியில் சமூக பணி, வணிகவியல், வேளாண்மை, வணிக நிர்வாகம் கால்நடை அறிவியல் பட்டம் பெற்றவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

5.ஆன்டிராய்டு போன் வைத்திருக்க வேண்டும் / பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

6. வாழ்வாதார வளர்ச்சி மற்றும் தொழில் மேம்பாடு செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

7. சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகியாகவோ அல்லது பணியாளராகவோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவோ இருக்ககூடாது.

மேற்கண்ட தகுதிகளையுடைய நபர்கள் தங்கள் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் தொடர்பாக அணுக வேண்டிய தொலைபேசி எண்:

பவானி-9443405252

பவானிசாகர்-9488387426

சத்தியமங்கலம்-7010872247

சென்னிமலை-9698670228

தாளவாடி-84899420127

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30.11.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் உள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!