சத்தியமங்கலம்; அரசூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சத்தியமங்கலம்; அரசூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

erode district news- குள்ளம்பாளையம், தாசநாயக்கனூர் கிராமத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. (கோப்பு படம்)

erode district news- சத்தியமங்கலம், அரசூர் ஊராட்சியில் உள்ள குள்ளம்பாளையம், தாசநாயக்கனூர் கிராமத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

erode district news- ஈரோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் முதல் புகையிலை இல்லா கிராமங்களை உருவாக்கிட அந்தந்த கிராமங்களில் கூட்டங்கள் நடத்தி, மக்களிடமும், வியாபாரிகளிடம் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று, புகையிலை இல்லா கிராமமாக அறிவிப்பு செய்து வருகின்றனர்.

அதன்படி, சத்தியமங்கலம் அரசூர் ஊராட்சியில் உள்ள குள்ளம்பாளையம், தாசநாயக்கனூர் கிராமத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் டாக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார நலக் கல்வியாளர் சிவகுமார் முன்னிலை வகித்தர். சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இளங்கோ, அரசூர் ஊராட்சி தலைவர் மலர்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் 100 நாள் பணியாளர்களுக்கு புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், உடல்நல பாதிப்புகள், புற்றுநோய்கள் குறித்தும், இளம் தலைமு றையினரின் சமூக சீரழிவு கள் குறித்தும், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகள் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்ப ட்டது.

அதைத்தொடா்ந்து அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். அதையடுத்து குள்ளம்பாளையம், தாசநாயக்கனூர் ஆகிய 2 கிராமங்களும் புகையிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவின் நினைவாக குள்ளம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளியில் மரக்கன்றும் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி, பி.டி .ஓ. பிரேம்குமார், கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் வகாப், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil