தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
ஈரோடு அருகே நசியனூரில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்காக காசநோய் ஒழிப்பு மற்றும் கோடை வெப்ப தாக்க பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவல் முறைகள், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள், பாதிப்பு, பரிசோதனை முறைகள் குறித்து விளக்கப்பட்டது. அரசு வழங்கும் மருத்துவ உதவிகள், ஊட்டச்சத்து திட்டங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்பாடு பற்றிய தகவல்கள் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டன.
கோடை வெப்பத்தினால் ஏற்படும் உடல் தளர்ச்சி, நீரிழிவு, வெப்பக்காய்ச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, அடிக்கடி நீர் பருகுதல், சரியான உணவுமுறை கடைப்பிடித்தல், ஓ.ஆர்.எஸ். கரைசல் தயாரித்தல் போன்ற விடயங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், முதுநிலை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை அதிகரித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu