ஈவிகேஎஸ் சாதிய மனநிலையில் இளையராஜாவை ஒருமையில் பேசியதாக குற்றச்சாட்டு

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது பெரும் சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. சாதிய மனநிலையில் இளையராஜாவை அவர் ஒருமையின் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துருக்குது.
ஈரோட்டில் நடந்த திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. இளையராஜா வா? வயது 80 க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்.. ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்" என ஒருமையில் பேசினார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ள நிலையில் பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறிச்சு சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், "பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது." அப்படீன்னு சொல்லி இருக்கார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu