செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க., வீடியோ கான்பரன்சிங் கூட்டம்

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபி எஸ்.பி. நகர் அருகே 'எலைட் விழா' கட்டடத்தில் அதிமுக பொதுச் செயலர் இ.பி.எஸ். தலைமையில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கட்சி நிர்வாகிகளுடன் ஒரு கூட்டம் நேற்று நடைபெற்றது, இக்கூட்டத்தில் கோபி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் தலைமையில் பவானிசாகர், அந்தியூர், கோபி ஆகிய மூன்று தொகுதிகளின் பொறுப்பாளர்கள் உட்பட 80 பேர் பங்கேற்றனர், வழக்கமாக அதிமுக சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் அதன் வழித்தடம் முழுக்க கட்சிக்கொடி, பிளக்ஸ் பேனர், மைக் செட்டில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பாடல்கள் ஒலிக்கும் என்றபோதிலும் நேற்றைய கூட்டம் நடந்த பகுதியில் அதிமுக கட்சி கொடி மற்றும் பிளக்ஸ் பேனர் என எதுவும் வைக்கப்படவில்லை, கூட்டம் நடந்த தரைதளத்தில் மட்டுமே ஒரு சிறிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது, கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்களுக்கு மொபைல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதுடன் கூட்டம் நடந்த அரங்குக்குள் ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது, காலை 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம் மதியம் 2:00 மணிக்கு நிறைவு பெற்றது, கூட்டம் முடிந்து வெளியே வந்த எம்.எல்.ஏ. செங்கோட்டையன் காத்திருந்த ஊடகங்களிடம் "இக்கூட்டம் குறித்த எந்த தகவல்களும் வெளியே வரக்கூடாது என எதிர்கட்சி தலைவர் உத்தரவிட்டுள்ளார்" எனக்கூறி வணக்கம் தெரிவித்தார், இவ்வாறு எந்தவித கட்சி அடையாளங்களும் இன்றி மிகவும் இரகசியமாக நடைபெற்ற இந்த வீடியோ கான்பரன்சிங் கூட்டம் பல்வேறு அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu