ஈரோடு : அஞ்சல் அலுவலகங்களில் விபத்து காப்பீடு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விபத்து காப்பீடு பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 28- ஆம் தேதி நிறைவு பெற உள்ளது.
இது குறித்து ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தினால் எதிா்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்துக்கும் பயனளிக்க கூடியது.
ரூ.320 பிரீமியம் தொகைக்கு ரூ.5 லட்சமும், ரூ.559 பிரீமியம் தொகைக்கு ரூ.10 லட்சமும், ரூ.799 பிரீமியம் தொகைக்கு ரூ.15 லட்சமும் காப்பீடும் பெறும் திட்டத்தில் இணையலாம்.
விபத்து காப்பீடு பதிவுக்கான தகுதி நிபந்தனைகள்
- 18 முதல் 65 வயதுக்கு உட்பட்டவா்கள்
- ஆதாா் எண்
- கைப்பேசி எண்
- வாரிசுதாரா்களின் ஆவணங்கள்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்
விபத்து காப்பீடு பதிவு செய்யும் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாமானது வரும் 28- ஆம் தேதியுடன்நிறைவடைய உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அவரவருக்கு பொருத்தமான விபத்து காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu