ஹெல்மெட் அணிந்தும் வாலிபர் உயிரிழப்பு

ஹெல்மெட் அணிந்தும் வாலிபர் உயிரிழப்பு
X
வாழப்பாடியில் கலவை கலக்கும் ‘மில்லர் மிஷின்’ மோதியதால், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

விபத்தில் வாலிபர் பலி வாழப்பாடியில் சோகம்

வாழப்பாடி: மேட்டுப்பட்டிபுதுாரைச் சேர்ந்த கமலேசன் மகன் பவித்ரன் (29), டிப்ளமோ முடித்து தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்துவந்தார். திருமணம் ஆகாத இவர், நேற்று காலை 8:40 மணியளவில், ஹெல்மெட் அணிந்து ‘சைன்’ மோட்டார் சைக்கிளில் சேலத்திலிருந்து வாழப்பாடி நோக்கி பயணித்தார்.

மேட்டுப்பட்டி அருகே சென்றபோது, முன்புறம் சென்ற சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் திடீரென கவனக்குறைவாக வாகனத்தை திருப்பியதால், அதன் பின்புறத்தில் இருந்த கலவை கலக்கும் ‘மில்லர் மிஷின்’ நேரடியாக பவித்ரனை மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தை கமலேசன் புகாரின் பேரில், வாழப்பாடி போலீசார் சரக்கு வாகன ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story