மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா

மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா
X
ஈரோட்டில், கொங்கு கல்வி நிலைய மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது

ஈரோடு கொங்கு கல்வி நிலைய மழலையர் பட்டமளிப்பு விழா

ஈரோடு: ரங்கம்பாளையம், கக்கன்ஜி நகரில் உள்ள கொங்கு கல்வி நிலையம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில், யு.கே.ஜி.,யில் இருந்து முதல் வகுப்புக்கு செல்லும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழாநடந்தது.

பள்ளி தலைவர் சின்னச்சாமி, தாளாளர் செல்வராஜ், பொருளாளர் குணசேகரன் ஆகியோர், குழந்தைகளுக்கு பட்டம் வழங்கினர். பள்ளி முதல்வர் வனிதா சுப்புலட்சுமி வரவேற்றார்.இதை தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிநடந்தது.

விழாவில் உதவி தலைவர்கள் தெய்வசிகாமணி, சோமசுந்தரம், இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், இணை பொருளாளர் நாகராஜன் மற்றும் கொங்கு கல்வி நிலைய மெட்ரிக் பள்ளி முதல்வர் நதியா அரவிந்தன், குழந்தைகளுக்கு பரிசு வழங்கினர்


Tags

Next Story