ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கார் ஷோரூம் மேலாளரிடமிருந்து ரூ.6.20 லட்சம் பறிமுதல்!
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணமின்றி பணம் கொண்டு வந்தால் பறிமுதல்
இக்குழுவினர் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாகன சோதனை
இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று (ஜனவரி 17) அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கேரள மாட்டு வியாபாரி ரபீக்கிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
இதில், காரை ஓட்டி வந்தவரிடம் ரூ. 2 லட்சம் ரொக்கம் இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்க பணத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 2 லட்சத்தையும் பறிமுதல் செய்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu