ஈரோட்டில் ஏப்.16ம் தேதி 514 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

ஈரோட்டில் ஏப்.16ம் தேதி 514 பறிமுதல் வாகனங்கள் ஏலம்
X

பைல் படம்.

ஈரோட்டில் ஏப்.16ம் தேதி காவல் துறையில் பறிமுதல் செய்யப்பட்ட 514 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.

ஈரோடு மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட யாரும் உரிமை கோராமல் 419 டூவீலர்கள், மூன்று நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. இவைகள் ஏப். 16ல், காலை 10:00 மணிக்கு, 46, புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

இது தவிர ஈரோடு மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 68 டூவீலர், 10 நான்கு சக்கர வாகனங்கள், மது விலக்கு குற்ற வழக்கில் சிக்கிய 6 நான்கு சக்கர வாகனங்கள், 8 இரு சக்கர வாகனங்களுக்கும் பொது ஏலம் நடக்கவுள்ளது.

மொத்தம் 495 டூவீலர்கள், 19 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது. முன் தொகை செலுத்துவோர் மட்டும் ஏலத்தில் பங்கேற்க முடியும்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி