ஈரோட்டில் மேலும் 397 பேருக்கு தொற்று உறுதி

ஈரோட்டில் மேலும் 397 பேருக்கு தொற்று  உறுதி
X

மேலும் 397 பேருக்கு தொற்று ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பிலிருந்து 1,103 பேர் குணமடைந்தனர்

ஈரோட்டில் மேலும் 397 பேருக்கு தொற்று உறுதியானது ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 1,103 பேர் குணமடைந்தனர்

ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தால் கொரோனா தாக்கம் 3 - ம் அலை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 1103 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 90 வயது மூதாட்டி மற்றும் 65 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது.தற்போது

மாவட்டம் முழுவதும் 6,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலோனோருக்கு லேசான அறிகுறி என்பதால் அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்றாவது அலையில் நமது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் முதியவர்கள் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டும் என்றும் அவர்களை தேவையில்லாமல் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதைப்போல் 60 வயதை கடந்த முதியவர்கள் யாராவது இன்னமும் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்களை உடனடியாக தடுப்பூசி போட வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!