ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் தபால் ஓட்டுக்களை செலுத்தலாம்
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டுக்களை செலுத்தலாம். இந்த வகையில் ௮5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள், 209 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 94 பேரும், பெண்கள் 115 பேரும் அடங்குவர்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 47 பேர்
மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை 47 ஆகும். இதில் ஆண்கள் 18 பேரும், பெண்கள் 29 பேரும் உள்ளனர்.
வீட்டில் வாக்களிக்க விருப்ப மனு பெறப்பட்டுள்ளது
85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் வீட்டிலேயே வாக்களிக்க விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
நடமாடும் தபால் ஓட்டுச்சீட்டு குழுவினர் ஓட்டுக்களைப் பதிவு செய்வர்
விருப்பம் தெரிவித்த வாக்காளர்களிடம், நடமாடும் தபால் ஓட்டுசீட்டு குழுவினர் சென்று, ஓட்டுக்களைப் பதிவு செய்வர் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu