கர்நாடகாவிலிருந்து 14 கிலோ குட்கா கடத்தல்: ஈரோடு போலீசாரால் 2 பேர் கைது..!

கர்நாடகாவிலிருந்து 14 கிலோ குட்கா கடத்தல்: ஈரோடு போலீசாரால் 2 பேர் கைது..!
X
கர்நாடகா மாநிலத்திலிருந்து 14 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீஸ் கைது செய்துள்ளனர்.

ஈரோடு : கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு சட்ட விரோதமாக குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் கடத்துவது தொடர்கதையாக உள்ளது. இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதி மாக்கம்பாளையம் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கடம்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் வாகன சோதனை

இதனை அடுத்து தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள மாக்கம்பாளையம் வன சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் வந்தனர். அவர்களை நிறுத்தி மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒரு பை இருந்தது.

குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன

பையை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 14 கிலோ எடை உள்ள ஹான்ஸ், கூல்லிப் விமல் பாக் ஆகிய தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து பெருந்துறை பகுதிக்கு கடத்திக் கொண்டு சென்று விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது.

மேலும் இருவரும் பெருந்துறை அருகே உள்ள ஆயி கவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (32), சுரேஷ் (40) என்பது தெரிய வந்தது.

விசாரணையில் போலீசார்

மேலும் இருவரும் பெருந்துறை அருகே உள்ள ஆயி கவுண்டன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரண்ராஜ் (32), சுரேஷ் (40) என்பது தெரிய வந்தது. இருவரிடமிருந்தும் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story