தெருநாய்களின் அட்டகாசாதல் 19 ஆடுகள் பலி

தெருநாய்களின் அட்டகாசாதல் 19 ஆடுகள் பலி
X
சென்னிமலையில், மீண்டும் தெருநாய்களின் தாக்குதலால் 19 ஆடுகள் பலியானது

சென்னிமலை:சென்னிமலை யூனியன் பு.பாலதொழுவு ஊராட்சி ராசம்பாளையம் மற்றும் கொடுமணல் பகுதிகளில் நேற்று முன்தினம் தெருநாய்கள் கடித்ததில், 19 ஆடுகள் பலியாகின.

இதில் ராசம்பாளையம், நசியங்தோட்டம் தங்கராசுக்கு சொந்தமான நான்கு ஆடுகள், அதே பகுதியில் பழனிசாமிக்கு சொந்தமான இரு ஆடுகள், சரவணனுக்கு சொந்தமான இரண்டு ஆடும் பலியானது. அதேபோல் கொடுமணல் பகுதியில் பனங்காடு விஜயகுமாருக்கு சொந்தமான, 11 ஆடுகள் பலியாகி விட்டன. ஒரே இரவில் பட்டியில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில், ஆடுகள் பலியானது, ஆடு வளர்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாய்கள் கடித்ததில் எட்டு ஆடுகள் படுகாயம் அடைந்து விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business