நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி 100 நாள் வேலைதிட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி 100 நாள் வேலைதிட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
X
நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு : நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஜீவா முன்னிலை வகித்தாா்.

9 வாரங்களாக நிலுவையில் உள்ள கூலியை உடனடியாக வழங்கக்கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.

பவானிசாகா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில், ஊதிய நிலுவைத் தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Tags

Next Story