ஈரோட்டில் இதுவரை 2.95 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை - சுகாதார துறையினர்

கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை. மாவட்டத்தில் இப்பவும் தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என ஈரோட்டில் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர் .

ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததோடு தினசரி பாதிப்பு 100 -ஐ கடந்தது. அதேசமயம் நோய் பாதிப்பில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பிறகு தினசரி பாதிப்பு 50-க்கு கீழ் குறையத் தொடங்கியது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 249 ஆகவும் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 12,781 ஆகவும் உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு 326 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 142 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது, "மாவட்டத்தில் கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக முடியவில்லை. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசமும், பொது இடங்களில் சமூக இடைவெளி மற்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தில் இப்பவும் தினமும் 2,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் காரணமாக உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!