பெண்ணிடம் நகை பறித்த 2 நபர்கள் கைது : பணக்காரர் ஆசையால் நேர்ந்த வினை

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகை ,இருசக்கர வாகனம், செல்போன்கள் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த என்பவர் தனது மனைவி தீப லட்சுமியுடன் கருங்கல்பாளையம் சாய்பாபா கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். கருங்கல்பாளையம் கேஎன்கே சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் தீபலட்சுமி அணிந்திருந்த சுமார் 3.5 பவுன் தாலியை பறித்து அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் சம்பவ பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது செயினை பறித்து சென்றது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர் அருண்குமார் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் கை செய்த காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நண்பர்களான இருவரும் சீக்கிரம் பணக்காரர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து 90ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள்,11 உயர் ரக செல்போன்கள் , 20 ஆயிரம் ரொக்கம், லேப்டாப் மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இவர்கள் வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!