பொது முடக்கத்திற்கு பின் இன்று தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு நடைபெற்றது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு ஏற்கனவே ஏப்ரல் 5-ந் தேதி நடைபெற இருந்தது. கொரோனா தாக்கம் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் மீண்டும் குரூப் 1 தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை குரூப் 1 தேர்வு தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 28 தேர்வு மையங்களில் இந்த குரூப் 1 தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும் 7 ஆயிரத்து 993 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வு காலை சரியாக 10 மணிக்கு தொடங்கியது. ஆனால் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வு அறைக்கு வந்தனர். அவர்களுக்கு நுழைவாயில் கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்டது. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் உடல் வெப்ப நிலையை கண்டறியம் கையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. தேர்வர்களுக்கு வசதியாக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தது. தேர்வு மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தேர்வில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் தேர்வினை கண்காணிக்க 3 பறக்கும் படை அலுவலர்கள், 5 நடமாடும் குழுக்களும், 25 ஒளிப்பதிவாளர்கள், 28 கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். தேர்வர்கள் தங்களது வினாக்களை கருப்பு பாயிண்ட் பேனா மூலம் மட்டுமே நிரப்ப வலியுறுத்தப்பட்டிருந்தது. தேர்வர்கள் தங்கள் கொடுக்கப்பட்டுள்ள ஓஎம்ஆர் சீட்டில் கேள்விக்கான விடைகளை படித்து குறித்தனர். தேர்வில் விடை தெரியாத தேர்வர்கள் இ என்ற கட்டத்தை குறிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலில் வந்தது. மேலும் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் நுழைந்ததும் தங்களது கைரேகையை பதிவு செய்தனர்.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியளவில் முடிவடைந்தது. தேர்வின்போது தடையின்றி மின் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ஈரோடு மாவட்ட கருவூலத்தில் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த அறைகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மூலம் விடைத்தாள்கள் அந்தந்த தேர்வு மையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu