எல்லை பெயர்பலகை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி

எல்லை பெயர்பலகை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி
X

கர்நாடக எல்லைக்குள் இருந்த தமிழக அரசின் எல்லை அறிவிப்பு பெயர் பலகைகளை தமிழக எல்லைக்கு மாற்றி வைத்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் எல்லை பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது.

தமிழக கர்நாடக மாநில எல்லையில் ராமபுரம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழக நெடுஞ்சாலை துறையின் தமிழ் எல்லை அறிவிப்பு பலகையை கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் கடந்த 10 ஆம் தேதி சேதப்படுத்தினர்.மேலும் எத்திகட்டை பகுதியில் உள்ள தமிழக அறிவிப்பு பலகையையும் கன்னட அமைப்பினர் சேதப்படுத்தினர். எனவே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநில எல்லை அறிவிப்பு பெயர்பலகை வைக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்ய ஈரோடு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து நில அளவை மற்றும் வருவாய்த்துறையினர் எல்லைக்கோடு அளவீடு செய்து கர்நாடக எல்லைக்குள் இருந்த தமிழக அரசின் பெயர்பலகையை அகற்றி தமிழக பகுதியான ராமபுரம், பாரதிபுரம், எத்திகட்டை, அருள்வாடி உள்ளிட்ட இடங்களில் நடப்பட்டது. இதனால் எல்லைப் பிரச்னைக்கு ஈரோடு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்து தீர்வு கண்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!