ஈரோட்டில் அனுமன் ஜெயந்தி
ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள மகாவீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டுதோறும்
அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வடமாலை சாற்றப்பட்டு இருக்கும். இதேபோல் பக்தர்களுக்கு லட்டு அன்னதானம் போன்றவை வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக இதற்கு அனுமதி இல்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதைடுத்து இன்று அதிகாலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் 8 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் தேங்காய் பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பேரிகார்டு அமைக்கப்பட்டு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர். மேலும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் , உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்குள்அனுமதிக்கப்பட வில்லை. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் படி, நடப்பாண்டு சுவாமி திரு வீதி உலா, தேர்தல் இழுத்தல், வியாபார கடைகள் அமைப்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீசாரும் அனுமதிக்கவில்லை. இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமரை வழிபட்டு சென்றனர். பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை ஆய்வு செய்யப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோயிலுக்குள் அனுமதித்தனர்.
இதைப்போல் ஈரோடு மாநகர் பகுதியில் கோட்டை பெருமாள் கோவில் உள்ள ஆஞ்சநேயர், கள்ளுகடைமேடு ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், ரெயில்வே காலனி சித்தி விநாயகர் கோவில் உள்ள ஆஞ்சநேயர், காரைவாய்க்கால் ராத்திரி சத்திரம் ஆஞ்சநேயர் கோவில், கருங்கல்பாளையம் விஸ்வரூப சீரடி சாய்பாபா கோவிலில் உள்ள பக்த அஞ்சநெயர் கோவில், மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் உள்பட கோவில்களில் அனுமன் ஜெயந்தி ஒட்டி பொதுமக்கள் திரளாக தரிசனம் செய்தனர். இதைப்போல் கோபி அந்தியூர் பவானி பெருந்துறை சத்தியமங்கலம் கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி ஓட்டி சிறப்பு ஆராதனை நடந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu